Volleyball premier league-UK- 2024 க்கான ஏலம் எடுத்தல் நிகழ்வு

பிரித்தானியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் கரப்பந்தாட்ட கழகங்களிலிருக்கும் வீரர்களை ஏலம் மூலம் தெரிவுசெய்து அவர்கள் புதிய 12 premier league அணிகளிற்குள் உள்வாங்கப்பட்டு volleyball premier league என்னும் பிரமாண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று Southall ல் உள்ளக மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான முன்னேற்பாடாக இவ்வருட வீரர்களை ஏலத்தில் எடுக்கும் VPL ஏலம் 2024 ஆனது இம்மாதம் மார்ச் 13ம் தகதி புதன்கிழமை மாலை 3.30 மணியிலிருந்து Crystal hall Hayes ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது VPL இயக்குனர் திரு.சுரேன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.சுரேஷ்.திரு.குட்டி. திரு.வதனன்.திரு.குகன்
ஆகியோர் தலமையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்நிகழ்விற்கு VPL போட்டி யின் அனுசரனையாளர்கள். 12 பிரிமியர் லீக் அணி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்து சிறப்பித்து வீரர்களை ஏலம் மூலமாக தேர்ந்தெடுப்பர். இவ் ஏல நிகழ்வானது மெய்வெளி தொலைக்காட்சி மற்றும் மெய்வெளி இணையம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்வில் VPL போட்டியின் அனுசரனையாளர்கள். 12பிரிமியர் லீக் அணி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்து சிறப்பித்து வீரர்களை ஏலம் மூலமாக தேர்ந்தெடுப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருட 2023 க்கான ஏல நிகழ்வானதும் நேரடியாக ஒளிபரப்பாகி பல ஆயிரக்கானவர்களை மகிழ்விக்கச்செய்து பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.