மரண அறிவித்தல் – அமரர் மொணிக்கா குணபால

திருமதி மொணிக்கா குணபால காலமானார்
தாளையடியை பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கடந்த வெள்ளிக்கிழமை 1ம் திகதி உடல்நலக்குறைவால்.தனது 83வது வயதில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
பேதுருப்பிள்ளை மற்றும் அன்னம்மா தம்பதிகளின் கடைசி மகளான இவர்,
அருட்தந்தை ஜகத் அடிகளார் ( நோர்வே) அஜித் ( பிரானஸ்) காலம்சென்ற சனத் , றஜித்தா லண்டன் , சுஜித் – லண்டன் , சுகத் – திருகோணமலை, சுமித் – கொழும்பு , சந்திரிக்கா கொழும்பு ஆகயோரின் உயிருக்குயிரான தாயாவார்.
சாம் பிரதீபன், கொறின், அங்கயற்கண்ணி, கீர்த்தனா, ரஜி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கெவின், அலன் , மத்தீஸ் ,அஞ்சலோ, அஞ்சனா, மரியோ, பியோ, கார்லோ, அஞ்சலினா, எய்டன் ஆகியோரின் பேரன்பிற்குமுரிய பேத்தியாருமாவார்.
தாளையடி பேதுருப்பிள்ளை பரம்பரையின் இறுதி வாரிசான இவர், காலஞ்சென்ற லேஞ்சியுஸ் பைதுருப்பிள்ளை , காலஞ்சென்ற எட்வேட் பேதுருப்பிள்ளை, காலம்சென்ற பெனடிக்ற் பேதுருப்பிள்ளை, காலஞ்சென்ற செல்வராசா பேதுருப்பிள்ளை ,காலஞ்சென்ற றோஸ்மலர் ஞானப்பிரகாசம் , காலம் சென்ற றபேக்கா ஜோ
அவர்களின் அன்புக்குரிய இளைய சகோதரியும் ஆவார்.
அன்னாரின பூதவுடல் அவரின் வாழ்விடமான கொழும்பு மட்டக்குளியவில் ஞாயிறு இரவு வரை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை மதியம் 2.00 மணிமுதல் தாளையடியில் உள்ள அவரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு செவ்வாய்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இறுதி திருப்பலி சடங்கிற்காக புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.பின்னர் அவரின் நித்திய நித்திரைக்காக தாளையடி சேமக்காலையில் கொண்டு செல்லப்படவுள்ளார் .
இத்துயர அறிவித்தலை, உற்றார் உறவினர்கள், ஊர்மக்கள், பங்குமக்கள் அயலூர் மக்கள், அன்பு உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வதோடு, இறையடியார் மொணிக்கா அவர்களின் ஆன்மா சாந்தி கொள்ள பிராத்திக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இறுதி மரியாதையும் நல்லடக்கமும்
நேரலையில் இணைந்துகொள்ள கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்