த்ரிஷாவின்  பேரவை இயக்கம் :  தமிழக இளைஞர்கள் சினிமா மோகத்திலிருந்து வெளியே வர வேண்டும்: அண்ணாமலை கடும் விமர்சனம்

Meiveli Media Team


திருநெல்வேலியில் நடிகை த்ரிஷாவின் பெயரில் பேரவை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக இளைஞர்கள் சினிமா மோகத்திலிருந்து வெளியே வர வேண்டும் என பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்இ சினிமா நட்சத்திரங்களின் பின்னால் இளைஞர்கள் செல்வது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கல்வியில் முன்னேறிய மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்கூட சினிமா நட்சத்திரங்களின் பின்னால் செல்வது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு எத்தகைய பாதையில் பயணிக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார். இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களில் நடித்தவர்கள் அல்லது பத்து திரைப்படங்களில் நடித்தவர்கள் தமிழகத்தின் தலைவர்களாகக் கருதப்படும் அரசியல் கலாசாரத்தை யார் உருவாக்கியது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், எதற்கெடுத்தாலும் சினிமாவை முன்னிலைப்படுத்தும் கலாசாரத்தை உருவாக்கியதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு குறித்து அக்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். மாற்றம் தேவை என்ற நோக்கத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தெரிவு செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்தக் கட்சியும் பழைய அரசியல் நடைமுறைகளையே பின்பற்றுவதாக விமர்சித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரையில்,  சினிமா பிரபலங்களை மையப்படுத்திய அரசியலுக்குப் பதிலாக மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் முன்னிலைப்படுத்தும் புதிய அரசியல் உருவாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">