வடக்கு – கிழக்கெங்கும் மாவீரர் பெற்றோர், உரித்துடையோருக்கு மதிப்பளிப்பு:  750 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் திருகோணமலையில் பங்கேற்பு

Meiveli Media Team


மாவீரர் நாள் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 750 இற்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றுதல், மலரஞ்சலி மற்றும் நினைவுரைகள் இடம்பெற்றுள்ளன. மன்னாரில் 55 கிராமங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையும் கலந்துகொண்டிருந்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்ற நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் பங்கேற்றதுடன், வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற நிகழ்வில் 300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு,  கிளிநொச்சி, வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் கோப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு வளாகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு – கிழக்கில் நினைவேந்தல் ஏற்பாடுகளும் துயிலும் இல்லங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">