கும்புக்கன பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை: வீதியைக் கடந்து ஓடிய யானைக் கூட்டம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

மொணராகலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கும்புக்கன பகுதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடமாடி வரும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் விசேட நடவடிக்கையொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, யானைக் கூட்டமொன்று வெல்லவாய – மொணராகலை பிரதான வீதியின் கும்புக்கன பாலத்திற்கு அருகில் வீதியைக் கடந்து வேகமாக ஓடும் காட்சிகள் ஊடகக் கேமராவில் பதிவாகியுள்ளன.