• Wednesday, February 4, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்இலங்கையை பாரப்படுத்த வேண்டி தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம்

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையை தூண்டுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் பேரவையின் இணைத் தலைமை நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கடிதத்தில், ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகள் எனப் பல தரப்பினர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது. எனவே, மேலும் கால அவகாசங்களை வழங்குவது அர்த்தமற்றது. ஐ. நா. பாதுகாப்பு சபையில் சீனா தனது ‘வீற்றோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்று உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.இந்தக் கருத்துக்கள் ஆதரமற்றவை.

Catchup shows

இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐ. நா. பாதுகாப்பு சபை ஊடாக மனித உரிமைகள் மீறல்களுக்காக ஐ. சி. சியில் பாரப்படுத்தியபோது அதற்கு எதிராக எந்தநாடும் வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. இதேபோன்று வட கொரியாவையும் ஐ. சி. சியில் பாராப்படுத்துவதற்கான விடயமும் ஐ. நா. பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு மனித உரிமைகள் பேரவை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Prev Post

வடக்கில் சீனாவினுடைய ஆதிக்கம் அதிகரிப்பு : செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

Next Post

விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி கண்டெடுப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் இலங்கை தேசத்தை…

Feb 3, 2026

ஜனாதிபதி மற்றும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கப்…

Feb 3, 2026

பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க கைது: பின்னணி காரணத்தை…

Feb 3, 2026

பாதாள உலகத் தொடர்பு குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்ஷவிடம் 4…

Feb 3, 2026

வாக்குமூலம் அளித்துவிட்டு ஷிரந்தி ராஜபக்ஷ நிதிக் குற்றப்…

Feb 3, 2026

பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டு கல்கிசை…

Feb 3, 2026

தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை…

Feb 3, 2026

பதுளையில் தீப்பிடித்து எரிந்த ஓட்டோ

Feb 2, 2026

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம்

Feb 2, 2026

மாற்றத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்துகையில் மனித வளத்தைத்…

Feb 2, 2026
Prev Next 1 of 54
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.