ஜனாதிபதியின் வார்த்தையை நம்பிய மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் ஆதங்கம் ……………
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இராணுவ தேவைகளுக்கு அவசியமற்ற காணிகள் விடுவிக்கப்படும் என்று சொல்லப்பட்ட போதிலும், கடந்த அரசாங்க காலத்தில் விடுவிப்பதற்கு இராணுவம் ஒப்புக் கொண்ட காணிகள்கூட விடுவிக்கபடாதது வேதனை அளிப்பதாக ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பலாலி பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு போராட்டம் 18 ஆவது வாரமாக இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இரண்டு தினங்களுக்கு முன்னர் அண்ணளவாக 11 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலே இன்று பலாலியிலே இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக வலி வடக்கு பிரதேசத்தில் 2035 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு இந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலே 1.69. ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிக்கின்றது. பலாலி வீதிக்கு கிழக்காக 2024 ஆம் காணிகள் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டபோது, படையினரின் வாகனங்களுக்கான சேர்விஸ் ஸ்ரேசன் அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் விடுவிக்கப்படாமல் இருந்த ஒரு சிறிய பகுதி காணியே இப்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அரசாங்கத்தினால் கணிசமான காணிகள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தியாக இது அமைந்திருக்கின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னனர் கூட தேசிய பாதுகாப்பிற்கு அவசியம் அற்ற தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற விடயத்தினை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார். அந்த அடிப்படையிலே முதற் கட்டமாக குறைந்த பட்சம் பலாலி வீதிக்கு கிழக்கு பக்கமாக இருககின்ற சுமார் 290 ஏக்கர் காணிகளாவது விடுவிக்கப்படும் என்று நாங்களும் எதிர்பார்த்தோம்.
காரணம், கடந்த அரசாங்க காலத்திலே காணிளை விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலே சுமார் 290 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பூர்வாகங்க வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தேர்தல்கள் இடம்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்து.
எனவே, இராணுவ தேவைகளுக்கு அவசியம் அற்ற பகுதிகள் அவற்றை விடுப்பதற்கு இராணுவம் சம்மத்தித்து இருக்கின்றது. ஜனாதிபதி சொல்லுகின்றார் இராணுவம் தேவைகளுக்கு அவசியம் அற்ற காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி சொல்கின்றார். எனவே குறைந்த பட்சம் 290 ஏக்கர் காணிகளாவது விடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருந்தது.
ஆனால் துரதிஸ்டவசமாக அது நடைபெறவில்லை.
இங்கே நாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய அபிலாசைகளை தங்கத் தாம்பூலத் தட்டில் வைத்து தருவதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை. ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதன் மூலமே எமது அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும் என்பதே கடந்த க்ல அனுபவம்.
இதன் காரணமாக போராட்டங்களை வலுப்படுத்துவதன் மூலமே எமது மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் ” என்று தெரிவித்தார்

