தீர்வு என்ற பெயரில் தமிழ்கட்சிகளை இனியும் ஏமாற்ற முடியாது: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிப்பு

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முயற்சித்தால் அதற்கு பூரண ஆதரவை தருவதற்கு தயார்.எதிர்வரும் அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழர்களின் தீர்வுக்கான கலந்துரையாடலை முன்னெடுத்தால் அந்த கலந்துரையாடல் தோல்வியிலேயே முடிவடையும். தீர்வு என்ற பெயரில் தமிழ்கட்சிகளை இனியும் ஏமாற்ற முடியாது, சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்த விடயத்தில் அவதானமாக உள்ளார்கள்.’ என சந்திரிகா கூறியுள்ளார்.