மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

மதமும் ஆட்சியும் ஒன்றாகக் கலக்கக் கூடாது.பௌத்தத்தை ஒரு அரசியல் ஆயுதமாக்குவதில்,மதம் பெற வேண்டிய உயர்வான அந்தஸ்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும், சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பது வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படமால் நடைமுறைச் செயல்களால் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெரிவித்தார்.நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் பல்வேறு தியாகங்களைச் செய்வது, கடினமானதொரு பயணத்தில் ஈடுபட்டுவரும் சம்புத்த சாசனத்தின் காவலர்களாக கருதப்படும் மரியாதைக்குரிய மகா சங்கரத்தினரைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும்,அதை நடைமுறை யதார்த்தமாக்குவதற்கு அனைவரும் ஒன்றித்து சமமாக பங்களிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.புத்தபெருமான் போதித்த தசராஜ தர்மத்தின் பிரகாரம் அரசாட்சி நடத்தப்பட்டால் நாடும்?இனமும்,மதமும்,சம்புத்த சாசனமும் பாதுகாக்கப்படும் எனவும்,அந்த இலக்கை அடைவதற்கு செயற்படுவது அனைவரின் பொறுப்பாகும் எனவும்இதற்போது பொய் கோலோட்சி உண்மை மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">