• Monday, September 25, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

திருடர்கள், கொலைகாரர்கள் அற்ற கட்சியே நாட்டை மீட்கும்; சந்திரிக்கா குமாரதுங்க

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 5, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
LESS

SUPPORT TO MEIVELI

ஊழலற்ற கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்காத அரசியல் கூட்டணி ஒன்றின் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியுமென   இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் கட்சியில் நாட்டை நேசிக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்வது முக்கியமான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எனினும் திருடர்களையும், கொலைகாரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான,  பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள நவ லங்கா நிதஹாஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திந்து வைத்து உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுநாட்டிலும் இன, மத பேதங்களை மறந்து, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென குமார வெல்கம உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். எனினும் ஒன்றை நான் தெரிவிக்கின்றேன். திருடர்களை இணைத்துக்கொள்ள வேண்டாமென கோருகின்றேன். தெரிவு செய்யுங்கள். கொலைகாரர்கள், திருடர்களை ஒன்றிணைத்தால் முன்கொண்டுச் செல்ல முடியாது. போராட்டக்காரர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அவர்களை அடக்குகின்றது. கைது செய்கின்றது. இந்த போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை ஆரம்பம் மாத்திரமே. ஆகவே நாம் அனைவரும் அவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நாட்டிற்கு என்னத் தேவையென்ற கோணத்தில் சிந்தித்து செயற்பட வேண்டும். என்றார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெரும்பாலானவர்கள் ஐந்து வருடங்களுக்கு நாட்டின் சொத்துக்களை முடிந்தவரை கொள்ளையடித்து, மக்கள் தொடர்பில் சிந்திக்காது தன்னை வளர்த்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது வலியுறுத்தினார்.

Prev Post

புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.

Next Post

ஐ.நாவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது, அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

இந்தியா-கனடா பிரச்சினை.! பஞ்சாப் பாஜக தலைவர் வெளியுறவுத்துறை…

Sep 25, 2023

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி…

Sep 25, 2023

பல்பொருள் அங்காடி யுவதி விவகாரம்-ஏழுபேர் கைது.

Sep 25, 2023

கண்டி-பணத்திற்காக பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்யும்…

Sep 25, 2023

ஒடுக்குமுறை சட்டத்தை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது-…

Sep 25, 2023

மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை…

Sep 25, 2023

மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்த ஆசாத் மௌலானா.

Sep 25, 2023

இலங்கையில் எரிபொருள் நிலையத்தை ஆரம்பிக்கவுள்ள அமெரிக்க.

Sep 25, 2023

தகராறு செய்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி…

Sep 24, 2023

கோவையில் நான் போட்டியிட தயாராக உள்ளேன்: கமல்ஹாசன் அறிவிப்பு

Sep 22, 2023
Prev Next 1 of 220
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.