• Wednesday, April 15, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளது

By Admin Last updated Sep 22, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் இன்று பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளதாக இலங்கையின் முன்னணி  வைத்திய தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நோயாளிகள் மருந்துகளுக்காகவும், விவசாயிகள் பசளைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடினால் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் நாட்டு மக்களை தீவிரவாதிகளாகவே அடையாளப்படுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை தீவிரவாதிகள். நாங்கள் மின்கட்டணம் அதிகம் என தெரிவித்து வீதிக்கு இறங்கினால் தீவிரவாதிகளாக மாறி சிறையில் அடைக்கப்படுவோம். நாளை மருந்துகள் இல்லையெனத் தெரிவித்து அதனை கோரினால் அரசாங்கம் எம்மை தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கும், விவசாயிகள் உரத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை செயற்படுத்துகின்ற அதேவேளை, இந்த நாட்டில் தீவிரவாதிகள் யார் என்பதற்கு புதிய அர்த்தம் ஒன்றையும் தந்துள்ளது. அதாவது அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் நிறைந்த பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிரான எவரும் அவர்களின் அர்த்தப்படுத்தலுக்கு அமைய தீவிரவாதிகள். இந்த நாட்டின் அனைத்து மக்களும் தீவிரவாதிகள் ஆனால் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அவரது குழு தீவிரவாதிகள் அல்ல, ஆகவே பயங்கரவாதம் இல்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தினுள் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர். ஆகவே இது பயங்கரவாத தடைச் சட்டம் என்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்கும் சட்டம் என அர்த்தப்படுத்திக்கொள்வதே சரியானதாக அமையும். என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் இலங்கையின் அனைத்து மக்களும் தீவிரவாதிகளாக மாற்றமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்கிறது

Next Post

மன்னாரில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கனிய வள அகழ்வு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் வெளியானதற்கு எல்.முருகன்…

Apr 14, 2026

திமுக இருக்கும்வரை பாஜகவால் தமிழகத்தை தொடக்கூட முடியாது:…

Apr 14, 2026

அல்லைப்பிட்டியில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட…

Apr 14, 2026

பிரித்தானியாவில் இருந்து இலங்கை திரும்பிய பெண் இராணுவ…

Apr 14, 2026

வளமான வடக்கு மாகாணம்’ என்ற எமது பொதுவான இலக்கை நாம்…

Apr 14, 2026

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்  உப்பள விவகாரம்:  நேரில்…

Apr 14, 2026

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு…

Apr 14, 2026

சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் : ஜனாதிபதி அநுர குமார…

Apr 14, 2026

காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண் ட குரல் :ஆஷா போஸ்லே…

Apr 13, 2026

லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம்: விஜய்…

Apr 13, 2026
Prev Next 1 of 110
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.