• Monday, August 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்கிறது

By Admin On Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையின் தற்போதைய ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்வதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்க தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது சித்தியடையத் தவறும் மாணவர்கள் இலவச தொழில் பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை உட்பட ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களை இணைத்து பணம் வசூலிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Catchup shows

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில்-ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை படிப்படியாக குறைத்துக்கொண்டு செல்கிறது. இது மிகவும் பாரதூரமான விடயம். ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றுகின்றனர். உயர் தரத்தில் மூன்று அல்லது மூன்றரை இலட்சம் பேர் தோற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை, நைட்டா மற்றும் ஜேர்மன் டெக் போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களில் தொழிற்பயிற்சிகள் இலவசமாகவே வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகளுக்கு அரசாங்கம் ஒரு தொகை பணத்தை வழங்கிய, போக்குவரத்து கொடுப்பனவுகளை வழங்கியது. ஆகவே பயிற்சிப்பெற்ற தொழிற்படையை உருவாக்க இந்தப் பயிற்சிகள் அவசியம். எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த பாடநெறிகளுக்கு கட்டணம் அறவிடத் தீர்மானித்துள்ளது. கட்டுபெத்த தொழில்துறை பொறியியல் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களுக்கு பணத்தை அறவிடவுள்ளதாக பத்திரிகை விளம்பரத்தை பிரசுரித்துள்ளது. சாதாரணமாக கிராமங்களில் சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் வெற்றிபெற முடியாமல் போன மாணவர்கள் மாற்று வழிகள் ஊடாக கல்வியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கையில் இதனை பணத்திற்கு விற்பனை செய்ய முயன்றால் என்ன செய்ய முடியும். ஒட்டோமொபைல் பொறியியல் பயிற்சி நிறுவனம் கட்டணம் அறவிபடப்படும் என பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனை யார் மேற்கொள்கின்றார்கள்? கல்வி அமைச்சே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.என்றார்.

தொழிற்பயிற்சிக்கென அமைச்சு ஒன்று கடந்தகாலங்களில் காணப்பட்ட நிலையில் தற்போது இதனை கல்வி அமைச்சின் ஒரு பிரிவாக உருவாக்கி கட்டணம் அறவிட திட்டமிடுவதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு காணப்படுமாயின் அதனை இல்லாது செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

பண்டோரா ஆவணங்கள் வெளியானமை, இலங்கையில் என்ன நடந்தது?

Next Post

பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளது

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள…

Aug 2, 2026

3,500 கூட்டுறவுக் கடைகள் மூலம் தரமான உள்நாட்டுப் பொருட்களை…

Aug 2, 2026

மஹர சிறைச்சாலையில் திடீர் மோதல் மற்றும் பதற்றம்: ஒருவர்…

Aug 1, 2026

ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த நபர் உயிரிழப்பு

Aug 1, 2026

இலங்கையில் 2026 ICT சட்ட மாநாடு கொழும்பு சினமன் லைஃப்…

Aug 1, 2026

உயிர்த்த ஞாயிறுத் வழக்கு: தீர்ப்பைத் தொடர்ந்து பலத்த…

Jul 31, 2026

17 ஆண்டுகள் சிறைவாசம்: எல்.டீ.டீ.ஈ சந்தேகநபருக்கு பிணை…

Jul 31, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்புச்…

Jul 31, 2026

அதிரடி தீர்ப்பு: முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்…

Jul 31, 2026

“அரசாங்கம் அதிகார போதையில் உள்ளது” – நீதிமன்றத்திற்கு வெளியே…

Jul 30, 2026
Prev Next 1 of 190
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.