பொகவந்தலாவையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

செ.திவாகரன்

ம/ மா/ஹவ/கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் இரண்டாவது முறையாக நடாத்தப்படும் மென்பந்து கிரிக்கெட் 2024 சுற்றுப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15,16 ஆம் திகதிகளில் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைய அணிக்கு 11 பேர் கொண்டு இடம்பெறவுள்ளன.

இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அனைவரையும் கலந்துகொள்ளமாறு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் (2003 சாதாரண தர மா மாணவர்கள்) கேட்டுக்கொள்கின்றனர்.