• Tuesday, March 21, 2023

Meiveli Meiveli - News

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமித்தமை தொடர்பாக ஜனாதிபதியிடம் பஃப்ரல் கேள்வி

By Admin On Sep 13, 2022
14
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

திறமையின்மை அடிப்படையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அனுமதியளித்தார் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு அமைப்பு பஃப்ரல் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்கும் அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதால் அதிக செலவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் தங்களுக்கு உரிய சம்பளத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா தெரிவித்துள்ள போதும் அதனை நிறைவேற்றுவது கடினமான விடயம் என அமைச்சர்கள் பலர் தெரிவித்துள்ளதாக பஃப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.அமைச்சர் ஒருவருக்கு 15க்கும் மிகாத தனிப்பட்ட அதிகாரிகள் இருக்கவேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு 6 வாகனங்களும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 600 லீற்றர் டீசல், 750 லீற்றர் பெற்றோல் என்பன வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கை மூலம் அமைச்சர் மற்றும் ஊழியர்களின் தொடர்பாடல் செலவை அரசாங்கம் ஏற்கும் என்பதுடன், குறிப்பிட்ட அளவுக்கு அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்தியுள்ளதாக பஃப்ரல் கோடி காட்டியுள்ளது. ஊழல் குற்றவாளிகளை அமைச்சரவைக்கு நியமித்ததையும் கண்டித்துள்ள பஃப்ரல், அதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செய்தி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.பொது மக்கள் பிரதிநிதிகளின் செயற்திறனை அளவிடுவதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Prev Post

ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தது சீனா

Next Post

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி: நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க…

Mar 21, 2023

சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு- சம்பிக்க எச்சரிக்கை!

Mar 20, 2023

மனித வெடிகுண்டுக்கான மூளைச்சலவை, மறுவாழ்வு மையங்களை…

Mar 20, 2023

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை…

Mar 20, 2023

தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி மதபோதகர் பெனடிக் ஆன்டோ கைது.

Mar 20, 2023

12வது நாளாக தொடரும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்…

Mar 20, 2023

சிவனொளிபாதமலை-தொதல் பொதியில் இறந்த எலி.

Mar 20, 2023

அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும்-தேசிய…

Mar 20, 2023

தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய.

Mar 20, 2023

டொலர் நெருக்கடி முடிவுக்கு வரும் – ஆளுநர் நந்தலால்…

Mar 20, 2023
Prev Next 1 of 146
Facebook
Facebook
© 2023 - Meiveli. All Rights Reserved.