• Sunday, September 20, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – சுதேஷ் நந்திமால்

By Admin Last updated Sep 12, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அமைதிப் போராட்டத்தில் ஈடுபடும்  மக்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள்  கிளர்ந்தெழ வேண்டுமென தென்னிலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால், ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

Catchup shows

இன்று மக்கள் ஆணைக்கு அப்பால் சென்று  அரச பயங்கரவாதம் செயற்படுகின்றது. இராணுவத்தை பயன்படுத்தி தடிகளை எடுத்துக்கொண்டு, மக்களின் அமைதியான ஆர்ப்பாட்டத்தை, மக்களின் ஜனநாயக உரிமையை இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்துகின்றார்கள். ஆகவே யார் இந்த நாட்டில் தீவிரவாதி? ஊழலுடனான இந்த ஆட்சிக்கு எதிரான இளைஞர் யுவதிகளா? இல்லாவிடின் ரணில் விக்ரமசிங்க, மொட்டுக் கட்சி இணைந்த இந்த அரசாங்கமா? இதனை மக்கள் புரிந்துகொள்ள முடியுமா? ரணில் விக்ரமசிங்க பல கனவுகளை இந்த மக்களுக்கு வழங்குகின்றார் எனினும் அதில் ஒன்றுமே பலிக்காது. அனைத்து பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி, தமது ஜனாதிபதி ஆசனத்தை காப்பாற்றி மீண்டும் ராஜபக்சவின் புதல்வருக்கு இந்த பதவியை வழங்கும் நோக்கத்தை நோக்கி அவர் பயணிக்கின்றார். பொறுத்தது போதும் மேலும் தாமப்படுத்த வேண்டாம். என்றார்.

ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது ஆயுதப் படைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் அரசாங்கமும், அதிகாரிகளுமே பயங்கரவாதிகள் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

Next Post

‘இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது’  அருட்தந்தை ரொஹான் சில்வா

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை…

Sep 18, 2026

ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி…

Sep 17, 2026

புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டுவரப்படும்: அமைச்சர்…

Sep 17, 2026

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் பயணிகள் நலன் கருதி ரயில்…

Sep 17, 2026

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்:…

Sep 17, 2026

அரசியல் நோக்கங்களுக்காகவே தொழற்சங்க போராட்டம்: பிரதி…

Sep 17, 2026

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி;…

Sep 17, 2026

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில்…

Sep 17, 2026

மட்டக்குளி கொடூர விபத்து: கஞ்சா போதையில் காரை ஓட்டி 3 பேரின்…

Sep 17, 2026

தெமட்டகொடை களுபாலம அருகில் துப்பாக்கிச் சூடு – முச்சக்கர…

Sep 17, 2026
Prev Next 1 of 192
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.