• Thursday, October 15, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

‘இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது’  அருட்தந்தை ரொஹான் சில்வா

By Admin Last updated Sep 13, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

Catchup shows

பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தத்தை தடுக்க முடியாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா, பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஜனநாயக போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர வேண்டுமெனின் அரசுக்கு பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்த ஒரு  குழு அவசியமாகின்றது. அதுவே இன்று இடம்பெறுவதாகவே நாம் நினைக்கின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பில் களத்தில் நின்றவர்கள் மீது இன்று பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. அவ்வாறு முத்திரைக் குத்தினால் அவர்களை கைது செய்து அடக்குமுறையை முன்னெடுக்கின்றனர். இந்த சட்டம் இந்த நாட்டுக்கு அவசியமா? இந்த சட்டம் இந்த நாட்டில் நடைமுறையில் இருக்கும்வரை இந்த அடக்குமுறை தொடரும். ஆகவே பொறுப்பான மக்களாக, இந்த நாட்டிற்கு அவசியமற்ற, நாட்டில் அவசியமான விடயங்களுக்காக குரல் கொடுப்பதை தடுக்கின்ற இந்த சட்டத்தை தயவு செய்து மீளப்பெறுங்கள். இது நடைமுறையில் இருக்கும் வரை சர்வதேசத்தின் எம்மீதான அழுத்தத்தை தடுக்க முடியாது. இந்த அடக்குமுறையை முழு சர்வதேசமும் பார்க்கின்ற ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தும். வடக்கு, தெற்கு என நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் இளைஞர்கள் இந்த சட்டத்தினால் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.என்றார்.

ஜனநாயகப் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென, மூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – சுதேஷ் நந்திமால்

Next Post

தமிழ் தரப்பினரது ஒன்றிணைந்த கோரிக்கையை கனத்தில் கொண்டது ஐநா: சுரேந்திரன் குருசுவாமி நம்பிக்கை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா…

Oct 13, 2026

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் 12,000-க்கும் மேற்பட்ட…

Oct 13, 2026

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

Oct 13, 2026

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை…

Oct 13, 2026

“உலகில் போர்ச் சூழல் நிலவினாலும் அது நமது மக்களைப்…

Oct 13, 2026

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ. 20 பில்லியன்…

Oct 13, 2026

“எமது அரசாங்கத்தின் கீழ் இனவாதம் மற்றும் மதவாத்திற்கு…

Oct 13, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ…

Oct 12, 2026

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான…

Oct 12, 2026

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் சாமர…

Oct 12, 2026
Prev Next 1 of 206
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.