செம்மணி மனித புதைகுழியில் 437 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 437 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி சித்துபாத்தி மனிதண புதைகுழி அகழ்வின் 36வது நாளான இன்று (18) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை பாசிமணி, வளையல், இரும்பு தகடு துண்டு ஒன்று உட்பட 3 சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 3 குவியல்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 135 பிற சான்றுப் பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 437 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 428 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.