சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை இரத்து செய்யுமாறு அவரின் தயார் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை இரத்து செய்யுமாறு அவரின் தயார் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த இவர், சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார்.
பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இவர் பதிவிட்ட கருத்து ஒன்று, அங்குள்ள மத நம்பிக்கைகள் அல்லது மதப் புனிதர்களை அவமதிப்பதாகக் கூறப்பட்டுச் சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அனோஜன் தனது கருத்துக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
இவரை மனிதாபிமான அடிப்படையில் மீட்க இலங்கை அரசும், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியமும் மற்றும் சவூதியில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களும் தூதரக மற்றும் கருணை மனுக்கள் மூலம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

