• Tuesday, February 17, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

By Admin On Sep 12, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டின் மூளைசாலிகளின் வெளியேற்றத்தை அதிகரித்துள்ளதாக வைத்திய சங்கம் ஒன்று தகவல்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 8 மாதங்களில் மாத்திரம் 500 வைத்தியர்கள் தொழிலை கைவிட்டு வெளிநாடு சென்றுள்ளதோடு, வெளிநாடு செல்லும் நோக்கில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வைத்திய சபையிடம் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஷமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

சாதாரணமாக வைத்தியர் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிய செல்லும்போது, அவருக்கு இலங்கை வைத்திய சங்கத்தின் ஊடாக நற்சான்றிதழ் பத்திரம் ஒன்று வழங்கப்படும். கடந்த மூன்று வருடங்களில் வருடாந்தம் சுமார் ஆயிரம் அல்லது 1200 என்ற எண்ணிக்கையில் இந்த கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.  எனினும் கடந்த எட்டு மாதங்களில் 2,206 பேர் இந்த சான்றிதழைப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக எங்குமே தகவல்கள் இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அதனைவிட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற அடிப்படையில் இந்த வைத்திய துறையை விட்டு வெளியேறியவர்கள் குறித்த ஆய்வு ஒன்றை, இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளை மையமாக வைத்து முன்னெடுத்தோம் எங்களுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கடந்த 8 மாதங்களில் மாத்திரம் சுமார் 500ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இது குறிப்பிட்டு சொல்லக்சூடிய மிகவும் பாரதூரமான விடயமாகும். அதேபோல் கடந்த 2 மாதங்களில் மாத்திரம் தமது தொழிலை கைவிட்டு, சுகாதார அமைச்சிக்குக் கூட அறிவிக்காமல் சென்றவர்களின் எண்ணிக்கை 50ற்கும் அதிகம். இது குறிப்பிட்ட சில புள்ளவிபரங்கள் மாத்திரமே. என்றார்.

இலங்கை வைத்திய சபையின் சான்றிதழை பெற்றுள்ள அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட முடியாது எனவும், எனினும் அவர்கள் அனைவரும் இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஷமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: அலி சப்ரி நிராகரிப்பு: தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு

Next Post

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – சுதேஷ் நந்திமால்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்கள், ஏலங்களை…

Feb 17, 2026

இலங்கை தமிழர்களுக்கு வீடு …இடைக்கால பட்ஜெட் தாக்கல்…

Feb 17, 2026

பிரித்தானியர் காலத்து நீராவி புகையிரத சேவை சுற்றுலா…

Feb 17, 2026

பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை; புதிய சட்டமும்…

Feb 17, 2026

சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட…

Feb 17, 2026

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த்…

Feb 17, 2026

பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி  ஜனாதிபதி அநுரகுமார…

Feb 17, 2026

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை…

Feb 17, 2026

பிரதமருக்கு யுத்தம் முடிவடைந்த திகதி கூடத் தெரியாது;…

Feb 17, 2026

நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி: மின் கட்டணத்தை உயர்த்தும்…

Feb 17, 2026
Prev Next 1 of 65
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.