திருகோணமலையில் அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி

திருகோணமலையில் அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து CARAT Sri Lanka 2024  பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளனர். அமெரிக்க கடற்படை, அமெரிக்க மெரைன் கோர்ஸ், மற்றும் இலங்கை கடற்படை என்பன ஒன்றாக இணைந்து  திங்கட்கிழமை 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை Cooperation Afloat Readiness and Training  Sri Lanka 2024  எனும் பயிற்சியினை திருகோணமலையில் மேற்கொள்ளவிருக்கின்றன.

இலங்கை கடற்படையின் மெரைன் எதிரிணைகளுடன் இணைந்து அனைத்து வகையான கடற்படை திறன்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படும் பயிற்சியானது, கடற்படைச் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் விசேட நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க மெரைன் கோர்ஸ் இன் படைப் பிரிவான அமெரிக்க கப்பற்படை பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்புக் குழுவின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். சமாதானப் பேச்சுவார்த்தைகள், முரண்பாடுகளை முகாமை செய்தல் மற்றும் அவற்றைத் தீர்த்தல் ஆகிய விடயங்களில் பெண்கள் வகிக்கும் மிகமுக்கிய பாத்திரங்களை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கையும்  CARAT Sri Lanka பயிற்சி உள்ளடக்கியுள்ளது.

ஐந்தாவது முறையாக நடைபெறும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த தமது பங்காளர்களுடன் கிட்டத்தட்ட 70 அமெரிக்க அலுவலர்கள் பணிபுரியும் இந்த ஊயுசுயுவு ளுசi டுயமெய இருதரப்பு கடல்சார் பயிற்சியானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பராமரிப்பதற்காக அமெரிக்காவும் இலங்கையும் கொண்டுள்ள வலுவான பங்காண்மை மற்றும் பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தனது 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இப்பயிற்சித் தொடரானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் இணைந்து செயற்படுதல், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் ஊடாக உறவுகளைக் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களில் அமெரிக்காவிற்கும் மற்றும் அதன் பங்காளர்களாக விளங்கும் கடற்படைகளுக்குமிடையில் நிலவுகின்ற தொழிற்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.