பிரித்தானியா அறிமுகப்படுத்திய சக்திவாய்ந்த லேசர் ஆயுதம்.

பிரித்தானியா இராணுவ உபகரணங்கள் சந்தையில் ‘டிராகன் ஃபயர்’ என்ற புதிய ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆயுதத்தை கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய இராணுவ நிபுணர்கள் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளனர்.

சுமார் 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம், இலக்கில் சக்திவாய்ந்த லேசர் கதிரை வெளியிட்டு, மிக வெற்றிகரமாக அழிக்கும் திறன் கொண்டது. ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்துவதை விட டிராகன்ஃபயர் ஆயுதத்தின் விலை குறைவு என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

பிரிட்டன் இந்த ஆயுதத்தை 2032 இல் வெளியிட்ட திட்டமிட்டிருந்தது, எனினும் ரஷ்யா- உக்ரைன் போரின் மேலும் வளர்ச்சியின் பின்னணியில், அதை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷேப்ஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2027ம் ஆண்டுக்குள் டிராகன்ஃபயர் ஆயுதத்தை உக்ரைனுக்கு வழங்க பிரிட்டனின் எதிர்பார்த்துள்ளது. இருப்பினும், ஏவுகணைகளைப் போலல்லாமல், இந்த ஆயுதம் ஒற்றை நேரியல் பாதையில் பயணிக்கும் இலக்குகளை மட்டுமே தாக்க முடியும் என்று இராணுவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.