113 பெரும்பான்மை கிடைக்காவிடின்  கூட்டு அரசாங்கத்தை அமைப்போம் :அனுர திஸாநாயக்க தெரிவிப்பு.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு 113 பெரும்பான்மை கிடைக்காவிடின் ஏனைய இணக்கமான குழுக்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய நாடாளுமன்றத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் உத்தேச அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அனுமதிக்காது என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனடாவின் டொரொன்டோவில் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் பேசிய அவர், ‘அரசாங்கம் ஆட்சியை இழக்கப் போவதாக கருத்துக் கணிப்புகள் கூறுவதால் இந்தத் தருணத்தில் ஒரு தேசியத் தேர்தலைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் தேர்தலில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் இப்போது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்