ரஷ்ய தலைநகர் மொஸ்கோ தீவிரவாத  தாக்குதலைத் தொடந்து பிரான்ஸில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலையில் குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் போன்ற பொது இடங்களில் ஆயுதப் படைகளின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான பொறுப்பை ஐ.எஸ் அமைப்பு ஏற்றுள்ளது.

இதனால் பிரான்ஸில் பயங்கரவாத எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.’ என அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டால் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.அத்துடன், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கேப்ரியல் அட்டால் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் மாஸ்கோ அருகே திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130க்கு மேற்பட்டோர் பலியானதாகுவம் 140க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.