எதற்காக இங்கு வந்தேன் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்பதக்காகவேவந்தேன்: ராதிகா சரத்குமார் .

சூர்யவம்சம் சின்னராசு மாதிரி இந்த நாட்டாமை எனக்கு பக்கபலமாக இருக்கிறார் என கணவர் சரத்குமார் குறித்து ராதிகா கலகலப்பாக பேசியிருந்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் , திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

பாஜக சார்பில் ராதிகா சரத்குமார்,  போட்டியிடுகின்றார். நீங்கள் சூர்யவம்சம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் தனது மனைவியை படிக்க வைத்து கலெக்டராக்கி அழகு பார்க்கும் சின்ராசுவை போல் அரசியலில் கூட எனக்கு தூண் இல்லாமல் ஆலமரம் போல் இந்த நாட்டாமை பக்கபலமாக இருப்பார். என்னை பெரியாளாக்குவதற்கு பக்கபலமாக சரத்குமார் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த தொகுதியில் எந்த பிரச்சினை வந்தாலும் உடனடியாக இந்த நாட்டாமையை நான் கூப்பிட்டு விடுவேன். நாம் அனைவரும் சேர்ந்து ஓர் உழைப்பை கொடுக்க வேண்டும். அரசியல் எனக்கு புதிதல்ல. நிறைய மேடைகளை நான் பார்த்துள்ளேன். நான் எதற்காக இங்கு வந்தேன், எனக்காகவா இல்லை, சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும். இந்த தொகுதி மக்கள் வேலைவாய்ப்பு, உணவு, இருப்பிடம் உள்ளிட்டவைகளுடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்தேன் என்றார்.