இலங்கை கொழுமபு துறைமுகம் நோக்கி சென்ற அமெரிக்க கப்பல் விபத்திற்குள்ளானது: 20க்கு மேற்பட்டவர்கள் பலி

அமெரிக்காவில் பாலமொன்றின் மீது சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் இன்று அதிகாலை மோதியுள்ளது.இதன்போது பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கி 20 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘டாலி’ என்ற கப்பல்  கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்திற்புள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் மீட்புப் பணி நடந்து கொண்டிருக்கின்றது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் துறைமுகத்தின் முகப்பில் உள்ள படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

பாலம் ஆற்றின் குறுக்கே இன்டர்ஸ்டேட் 695 நெடுஞ்சாலையைக் கொண்டு செல்கிறது. இதில் பயணித்த பல வாகனங்கள் ஆற்றில் மூழ்கியு;யளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.