ஆளவந்தான் படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது.

ஆளவந்தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கடந்த 2001ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் கதை திரைக்கதை வசனம் எழுதி இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் ஆளவந்தான்.

இந்தபடம் 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வருகிற டிசம்பர் 8ம் திகதி மீண்டும் திரைக்கு வருகிறது.

ஹீரோ- வில்லன் என கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்த ஆளவந்தான் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது.