வசூலில் அதிரடி காட்டும் ‘லியோ’ திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இந்த ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் (கடந்த 19-ஆம் தேதி) வெளியானது. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

ஆம்… முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 148 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. தற்பொழுது, இந்த திரைப்படம் தமிழ்நாட்டை போலவே மற்ற மாநிலங்களிலும் கொண்டாடி வருகிறார்கள் போல் தெரிகிறது.

தற்போது, தெலுங்கு சினிமாவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது 2 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.