பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் நாணய சுழற்ஹ்யில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி சார்பில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் 286 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ஓட்டங்களும் , தொடக்க ஆட்டக்காரரான ஷபீக் 58 ஓட்டங்களும் எடுத்திருந்தார்.

அடுத்தடுத்து வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து கொண்டு இருக்கையில் ஷதாப் கான் இப்திகார் அகமது தலா 40 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது மூன்று விக்கெட்டையும், நவீன் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். 287 ஓட்டங்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ஓட்டங்கள் , இப்ராஹிம் சத்ரான் 87 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மத் ஷா இருவரும் அதிரடி காட்டினர். நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் 48*, ரஹ்மத் ஷா 77* ஓட்டங்களுடன் இருந்தனர்.

பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.