பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் புதிய வரைபின் உள்ளடக்கம் குறித்து மேற்குலக நாடுகள் கவலை.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் சமீபத்திய வரைபு குறித்து அரசாங்கத்திற்கு வலுவான கவலையை வெளிப்படுத்த மேற்குலக நாடுகள் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் தீவிர பகுப்பாய்வுகளை நடத்தி வருவருதுடன் தங்கள் சட்ட வல்லுனர்களுடன் ஊடாக இந்த சட்டமூலங்களை அவதானித்த பின்னரே தமது கவலையை வெளிப்படுத்த இந்த நாடுகள் முடிவுசெய்துள்ளன.

இந்த நாடுகளின் பிரதிநிதிகள் சட்ட வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சர்வதேச தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை புறக்கணித்து குறித் சட்டமூலங்களை உருவாக்கியுள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட விடயமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்தியத்தில் சந்தைகளை அணுகுவதற்கானஜிஎல்பி பிளஸ் வர்த்தக வசதி மற்றும் சர்வதேச தரநிலைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் வரைபை சமர்ப்பித்த போது மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களைத் தொடர்ந்து குறித்த சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கைகளை் எடுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளும் புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. முன்னதாக, அமெரிக்க வெளிவிவகார துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் புதிய வரைபின் உள்ளடக்கம் குறித்தும் கேட்டறிந்தார். முந்தைய சட்டத்தில் இருந்து இது முன்னேற்றகரமாக இருந்தபோதிலும், அமெரிக்காவும் இந்த சட்டமூலத்தை கவலையுடன் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.