தேர்தல் ஒத்திவைப்பு அரசியல் இலாபத்திற்காக மாத்திரமே: ஜீ எல் பீரிஸ் கண்டனம்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபையினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ எல் பீரிஸ் இதனை தெரிவித்தார்.  உரிய தினம் ஒன்றினை தீர்மானிக்காது சட்டவிரோத காரணங்களை முன்வைத்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை அரசியல் இலாபத்திற்காக மாத்திரமே என்பதனை அனைவரும் அறிவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானங்களுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும்  முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.