காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கும் பிணை.

காலிமுகத்திடலில்   இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்களையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று  (10) உத்தரவிட்டார்.

காலிமுகத்திடலில் சட்டவிரோதமான கூட்டமொன்றில் அங்கம் வகித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் இக்குழுவினர் செயற்பட்டதாகவும் கலைந்து செல்லுமாமாறு பொலிஸாரின் கோரிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அமைதியான கூட்டத்தை தூண்டியது பொலிஸாரே எனவும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்ட விதம் தவறு எனவும், சிறுவர்கள் கூட துன்புறுத்தப்பட்டதாகவும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.