• Saturday, July 25, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகளால் மக்களுக்கு பாதிப்பு

By Admin Last updated Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, நாட்டின் சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.

“தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக அகற்றாததால், ஒட்டுண்ணி தொற்று, நுரையீரல் தொற்று, பக்டீரியா மூளைக்காய்ச்சல், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, பூஞ்சை தொற்று மற்றும் பக்டீரியா (இரத்த ஓட்டத்தில் பக்டீரியா) உள்ளிட்ட தேவையற்ற பிரச்சினைகளுக்க முகம் கொடுக்க நேரிடலாம்.”

நோயாளர்களிடமிருந்து தொற்றுக்குள்ளான கழிவுகளை அகற்றும் பணி தனியார் துறை நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ தொற்று கழிவுகளை அகற்றுவதற்கு நூறு ரூபா பணம் போதாது எனவும் சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்தத் தொகை 2017ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது, அப்போது ஒரு லீட்டர் டீசலை 85 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும். மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனம்  ஒப்புக்கொண்ட விலையை அரசு உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.”

Catchup shows

கழிவுகளை அகற்ற தேவையான டீசல் விநியோகம் கிடைக்காததாலும், நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாலும், கடந்த வாரம் பல வைத்தியசாலைகளில் நோய்த்தொற்று கழிவுகள் குவிந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைக்கு தீர்வு வழங்கப்படாததாலும், கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றாக தனியார் மயமாக்கப்பட்டதாலும், வைத்தியசாலை மட்டத்தில் கழிவுகளை குவிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர் மேலும் தெரிவிக்கின்றார்.

Prev Post

எதிர்ப்பாளர்களை ஒடுக்க ‘PTA அவசியம்’

Next Post

பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் 3…

Jul 24, 2026

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Jul 24, 2026

எதிர்க்கட்சிகளை அடக்குவதை விட்டு குற்றங்களை…

Jul 24, 2026

கொழும்பு – தலைமன்னார் இடையிலான ரயில் சேவை மீண்டும்…

Jul 24, 2026

இலங்கை மத்திய வங்கிக்கு எதிராக சிவில் புலனாய்வு முன்னணி…

Jul 24, 2026

ஜப்பான் அரசின் உதவியின் கீழ் 7 மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு…

Jul 24, 2026

சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் ஆளுகை குறித்த தேசிய சட்ட…

Jul 23, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கைது செய்வதைத் தடுக்கக்…

Jul 23, 2026

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட…

Jul 23, 2026

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட…

Jul 22, 2026
Prev Next 1 of 187
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.