• Thursday, June 19, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வழக்கு விசாரணைகள் இன்றி இளைஞர்கள் தடுத்து வைப்பு’ செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

By Admin On Sep 9, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 தமிழ் இளைஞர்கள், எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு தென்னிலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டிற்கு அவசியமற்ற இளைஞர்களின் வாழ்வை பாலாக்கும் கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமென சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் 13 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

இந்த நிலையில் அவர்களை பார்வையிடுவதற்காக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் தலைவர் அருட்தந்தை ரொஹான் சில்வா, அரசியல் கைதிகளை விடுவதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று மெகசன் சிறைக்குச் சென்றனர்.

Catchup shows

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அருட்தந்தை ரொஹான் சில்வா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்று வரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 13 தமிழ் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இன்று உறுதி அளித்துள்ளதாக எமக்கு அறியக்கிடைக்கின்றது. குறித்த கைதிகள் ஏதாவது தவறிழைத்திருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அதனை நிறைவு செய்யாமல் இருப்பது சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தின் உன்னதமான வாசகத்திற்கு செய்யும் அகௌரவமாகவே நாம் காண்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டிற்கு அவசியமில்லை. வெகு விரைவில் அதனை மீளப்பெற வேண்டும். இந்த சட்டத்தின் ஊடாகவே இந்த இளம் தலைமுறையின் வாழ்க்கை சீரழிகிறது. வழக்கு விசாரணைகளை நிறைவு செய்து அவர்கள் சாதாரண வாழ்க்கையை தொடர்வதற்கு வாய்ப்பளிக்குமாறு கோருகின்றோம். என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற நிலையில் அந்த சட்டத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து அடக்குமுறையை செயற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அருட்தந்தை ரொஹான் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Prev Post

நாடு நெருக்கடியில் இருக்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் நியாயம் என்ன?M.A சுமந்திரன்

Next Post

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்திற்கு தொழிற்சங்கத் தலைவர் கடும் எதிர்ப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க மற்றும் சுவிஸ் நாடுகளின்…

May 20, 2025

தமிழ் டயஸ்போராவுக்கு அரச தரப்பில் ஆதரவு? – சரத்…

May 20, 2025

இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும்…

May 20, 2025

ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்…

May 16, 2025

காணி சுவீகரிப்பைத் தடுக்க சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது…

May 15, 2025

கனடாவில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கு…

May 15, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச…

May 15, 2025

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு ஒரு சிவப்பு…

May 12, 2025

அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு…

May 12, 2025

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் நிலையைப் பார்வையிட…

May 12, 2025
Prev Next 1 of 419
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.