இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்திற்கு தொழிற்சங்கத் தலைவர் கடும் எதிர்ப்பு
நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்தமைக்கு தென்னிலங்கையின் பிரபல வைத்திய தொழிற்சங்கத்தின் தலைவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு ஊடாக விஞ்ஞான ரீதியாக 18 அல்லது 20 அமைச்சர்கள் போதுமானது எனவும், முடிந்தால் இந்த மாற்றத்தை முதலில் செயற்படுத்துமாறும், வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும், மக்கள் பேரவையின் உறுப்பினருமான ரவி குமுதேஷ் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலியுறுத்திளயுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
சாதாரண மக்களுக்கு வரிச்சுமையை அதிகரித்துவிட்டு, குறைந்தது அத்தியாவசியமாக மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கேனும் நிவாரணத்தை வழங்கும் செயற்பாட்டையாவது முன்னெடுக்கத் தவறியுள்ள அரசாங்கம், அரசாங்கம் பல இராஜாங்க அமைச்சுக்களை நியமித்துள்ளது. நாங்கள் ஏற்கனவே மக்கள் பேரவை என்ற வகையில் செங்கடகல பிரகடனத்தின் ஊடாக விஞ்ஞானப் பூர்வமான 18 அல்லது அதிகபட்சமாக 20 அமைச்சுக்களையும், அவசியமெனின் மாத்திரம் 20 பிரதி அமைச்சுக்களை நியமிக்குமாறு வலியுறுத்தியிருந்தோம். இந்த சிறிய நாட்டை நிர்வகிக்க இது போதுமானது. எனினும் அரசாங்கத்திற்கு முன்னுதாரணம் என எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் மீண்டும் நியமனங்களை வழங்கி, சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி மக்களின் வரிச்சுமையை அதிகரிக்கின்றது. பல பணிப்பாளர்கள், ஆலோசகர்களை அரசாங்கம் நியமித்துள்ளது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என எவருக்கும் தெரியாது. இவ்வாறு செயற்படுகையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி இல்லையா? இந்த நாட்டை நிர்வகிக்க ஊடாக விஞ்ஞானப் பூர்வமான 18 அல்லது அதிகபட்சமாக 20 அமைச்சுக்கள் போதும், அவசியமெனின் மாத்திரம் 20 பிரதி அமைச்சுக்களை போதும் முடிந்தால் முதல் நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் இதனை செய்து காட்டட்டும். என்றார்.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சுமைகளையும் பொது மக்கள் மீது சுமத்தியுள்ள அரசாங்கம் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக மக்களின் வரிப்பணத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கான சலுகைகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.