டாரியா டுகினாவின் கொலைச் சம்பவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி கண்டனம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் செய்தியாளரும் ஆர்வலருமான டாரியா டுகினாவின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.

அவரது உற்ற நண்பர் அலெக்சாண்டர் டுகினின் மகள் அவர். குமாரி டுகினா காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அது வெடித்தது.அவரின் வாகனத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுக்கு உக்ரேன் பொறுப்பு என்று ரஷ்யா கூறியிருக்கிறது.

ஆனால் அதை உக்ரேன் மறுத்துள்ளது. அந்தக் கொலை இழிவான, கொடூரமான குற்றச்செயல் என்று  புட்டின் குறிப்பிட்டார்.குமாரி டுகினா ரஷ்யாவின் பெரும் ஆதரவாளர் என்று அவர் கூறியுள்ளார். உக்ரேனைச் சேர்ந்த ஒரு பெண்மணியே அவரது மரணத்திற்குக் காரணம் என்று ரஷ்யா குறிப்பிட்டது.அவர் கடந்த மாதம் ரஷ்யாவுக்கு வந்திருந்ததாகவும் குமாரி டுகினா தங்கியிருந்த அதே கட்டடத்தில் வாடகை வீட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

குமாரி டுகினா உக்ரேனின் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்த தேசியவாதி என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஒருபகுதியாக உக்ரேன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவர் வெளிப்படையாக வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.