பின்லாந்துப் பிரதமரின் கொண்டாட்ட காணொளி: பிரதமர் போதைப்பொருள் உள்ளெடுக்கவில்லை

நண்பர்களுடன் பின்லாந்துப் பிரதமர் சானா மரின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொளியின் பிரசுரத்தைத் தொடர்ந்து அவர் எடுத்துக் கொண்ட போதைப்பொருள் சோதனையில், அவர் எப்போதைப்பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

கொக்கேய்ன், கஞ்சா, ஓபியம் போன்ற வெவ்வேறான போதைப்பொருள்களின் பிரசன்னமிருந்ததா என பிரதமர் மரினின் சிறுநீர் மாதிரியில் சோதிக்கப்பட்டதா என பிரதமர் மரினின் சிறப்பு ஆலோசகர் நேற்றுக் கூறியுள்ளார்.காணொளியில் சில கருத்துக்கள் போதைப்பொருள்களைக் குறிப்பவையாகக் காணப்பட்டிருந்தன.அல்ஹஹோலை அருந்தியிருந்ததாக பிரதமர் மரின் ஒத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.