• Thursday, October 15, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுவிழா கடந்த ஞாயிறு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.

By Admin Last updated Sep 27, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

2022 ம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுவிழா கடந்த ஞாயிறு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்பது இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டின் நோக்கமாகும். அதேவேளை இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டில் பங்குபெறும் விளையாட்டுவீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெற்றி ஈட்டுவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

கடந்த சனியன்று மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் இடையில் சத்தப்பந்து கிரிக்கட் போட்டி நடைபெற்றது. அந்த சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் உதயம் விழிப்புலனற்றோர் அணி வெற்றி ஈட்டியது.

Catchup shows

ஒவ்வொரு தடவையும் Tamil Para Sports நடைபெறுகின்ற போதும் ஒரு விஷேட நிகழ்வாக சத்தப்பந்து கிரிக்கட் போட்டி நடைபெறுவதோடு, இந்த போட்டியில் பங்குபற்றும் வீரர்களில் சிலர் இலங்கையின் தேசிய சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தேசிய சத்தப்பந்து கிரிக்கட் போட்டி குழுவின் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசும் போது, இவ்வாறான போட்டிகளில் பல சத்தப்பந்து கிரிக்கட் வீரர்களை உருவாக்க கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவர்கள் தேசிய அணியில் போட்டியின் அடைப்படையில் தெரிவு செய்வதற்கு தாங்கள் ஏற்பாடுகளை செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

Prev Post

பேரினவாத பௌத்தர்களின் செயற்பாட்டுக்கு தமிழர் ஆதரவு

Next Post

ஐ.நா தீர்மானங்களை நிராகரிக்கும் உயர் நீதிமன்றம்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா…

Oct 13, 2026

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் 12,000-க்கும் மேற்பட்ட…

Oct 13, 2026

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

Oct 13, 2026

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை…

Oct 13, 2026

“உலகில் போர்ச் சூழல் நிலவினாலும் அது நமது மக்களைப்…

Oct 13, 2026

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ. 20 பில்லியன்…

Oct 13, 2026

“எமது அரசாங்கத்தின் கீழ் இனவாதம் மற்றும் மதவாத்திற்கு…

Oct 13, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ…

Oct 12, 2026

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான…

Oct 12, 2026

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் சாமர…

Oct 12, 2026
Prev Next 1 of 206
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.