மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் 12,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான புதிய வீடுகளை வழங்க நடவடிக்கை – தேசிய பேரிடர் மேலாண்மை மையம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் நிலமைகள் காரணமாக பெருமளவில் மண்சரிவுகள் பதிவான பகுதிகளில், அந்த அபாயகரமான இடங்களில் தொடர்ந்தும் வசிக்கும் 12,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் பிரஜித் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிக மழைவீழ்ச்சி நிலமைகளைக் கருத்திற்கொண்டு, தொடர்ந்தும் மண்சரிவு அபாய வலயங்களிலும் ஆபத்தான இடங்களிலும் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

அவசர பேரிடர் நிலை ஏற்படும்போது அவர்களைத் தற்காலிகமாக வெளியேற்றி பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்வதுடன், அக்குடும்பங்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான புதிய வீடுகளை வழங்குவதற்கான ஆரம்ப ஏற்பாடுகளும் ஒருங்கிணைப்புப் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.