ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்களா? சுஹாசினி சொன்ன பதில்


மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படம் 1991ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அவர்கள் இருவரும் எந்த படத்திலும் இணையவில்லை. இந்நிலையில் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னமும், கமலும் ‘தக்லைப்’ படத்தில் இணைந்திருக்கும் நிலையில் அடுத்தபடியாக ரஜினியும், மணிரத்னமும் இணையப் போவதாக சமீபத்தில் ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் நடிகை சுஹாசினி கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரிடத்தில் அது குறித்து கேள்வி எழுப்பிய போது, ரஜினியும் மணிரத்னமும் மீண்டும் இணைவதற்காக பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

ஊடகங்களில் வெளியான செய்தி வெறும் வதந்தி என்று தெரிவித்திருக்கிறார் சுஹாசினி.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">