சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நிதி நெருக்கடி குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் எதிர்வரும் 26ஆம் திகதி மற்றுமொரு சுற்றுக் கலந்துரையாடலை நடாத்துவது எனவும், எதிர்காலத்தில் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாக்கி, டுபாகஸ், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.