பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாவிடின் அடக்குமுறையை கையாளும் அரசு, மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு முடியாத சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாள்வதாக அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயகப் போராட்டக்காரர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அந்த நோக்கம் வெளிப்படுவதாக அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்  லஹிரு லக்சான் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து அறிக்கை ஒன்றை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க முடியாத நிலையில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாளுகின்றார்கள். மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அடக்குமுறை மூடிமறைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர். வரலாற்றை நாம் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். ராஜபக்சக்களை அதிகாரத்தில் இருந்து நீக்கியதோடு, இந்த நாட்டில் இருக்க முடியாத அளவிற்கு எவ்வாறான செயற்பாடுகளை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்தார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம். யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை எவ்வாறு மாணவர்களை அடக்குவதற்கு பயன்படுத்துகின்றார்கள்? எந்த அடிப்படையில் மாணவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்கின்றார்கள்?  என்றார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">