காலம் நம்புகின்றது. ஆனால் காலத்தவர்கள் நம்புவதற்கு இவர்கள் தாண்ட வேண்டிய சுவர்கள் இன்னமும் அதிகம் இருக்கின்றது
வீடியோ பதிவிற்கு கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்
விடுதலைக்காகப் போராடும் எந்தவொரு இனத்தினதும் குரல்வளை நெரிக்கப்படும் போது அந்த இனம் குறித்த ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற புறத்தே இருந்து ஒரு சமூகமோ அல்லது ஒரு அரசோ இல்லை தனி மனிதனோ புறப்பட்டு வந்ததாய் இன்று வரை உலக சரித்திரத்தில் எந்த வரலாறும் இல்லை.
தமது தேவைகள் குறித்தும் தமது பூகோள நலன் சார்ந்த நகர்வுகள் குறித்தும் மட்டுமே அதிக அக்கறைப்படும் உலக சமூகம் காப்பாற்றித் தந்த ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் என்பது இதுவரை எவராலும் விரல் நீட்டிக் காட்டமுடியாத ஒரு பக்கமாகவே இருக்கின்றது.
லெப்ரினன் கேணல் பொன்னம்மான் ,லெப்ரினன் கேணல் குமரப்பா , லெப்ரினன் கேணல் புலேந்தி அம்மான், லெப்ரினன் கேணல் சந்தோசம் மாஸ்ரர் கேணல் கிட்டு, லெப் கேணல் அப்பையா
அடிக்கல் நாயகர்கள் என்றால் யார்? அவர்கள் ஏன் தனியாக துருத்தித் தெரிகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு அவர்கள் சார்ந்த நினைவு சுமந்த பாடல் வெளியீட்டுக்கூடாக சங்கதி சொல்லத் தொடங்கியிருந்த ஆரம்ப நிகழ்வு இங்கு இடம்பெற்ற பெரும் சிறப்பம்சம் ஆகும்.