இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்ற அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக்கிண்ண விளையாட்டு விழா

இங்கிலாந்தில் தமிழீழ அரசியத்துறையின் விளையாட்டு ஆணையம் நடத்திய அடிக்கல் நாயகர்கள் நினைவு வெற்றிக் கிண்ணம் 2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ் வர்த்தகர்கள் தமிழர் விளையாட்டக் கழக வீரார்கள், ஆதரவாளர்கள், இளையவர்கள் பெரியவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்களின் பங்குபற்றுதலுடன்  விறுவிறுப்பாக நடைபெற்றது. இலண்டன் சவுத்ஹோலில் அமைந்துள்ள லண்டன்  ரைகேஸ் விளையாட்டு திடலில்  ககாலை 9 மணிக்கு பொதுச் சுடர் ஏற்ப்பட்டு, பிரித்தானிய கொடி, தமிழீழ தேசியக் கொடி மற்றும் விளையாட்டு ஆணையத்தின் கொடி ஏற்ப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.  விளையாட்டு ஆணையத்தின் அங்கத்தவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியபடி விளையாட்டு மைதானத்தை சுற்றி ஓடி தீபம் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்தாட்டம் என்ற போட்டிகளில்  இஙக்லாந்தின் பல பாகங்களிலுமுள்ள 60க்கு மேற்பட்ட விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. பல வயது ப் பிரிவினருக்குமான போட்டியில் இளைஞர்கள் பெரியவர்கள் உற்சாகத்துடன்  விளையாடியதைக் காணக்கூடியதாக இருந்தது. 9 வயதிற்கு கீழ்பட்டோருக்கான  உதைபந்தாட்டத்தில் ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றிக் கிண்ணத்தையும் குருநகர் பாடும்மீன் கழகம் 2ம் இடத்தையும் தட்டிச் சென்றது. சிறந்த விளையாட்டு வீரராக பாவிஷ் நந்தகுமார் தெரிவுசெய்ப்பட்டார்.  11 வயதுக்கட்பட்டோருக்கான போட்டியில் குருநகர்  பாடும் மீன் அணி வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்ற அதேவேளை சன்றைஸ் அணி 2ம் இடத்தை பிடித்துக் கொண்டது. இதில் பாடும் மீன் அணியின் சேய் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டார். 13  வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஒலிம்பிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்க  மயிலங்காடு ஞானமுருகன் அணி 2ம் இடத்தை பெற்றுக் கொண்டது.சிறந்த விளையாட்டு வீரரராக டென்சின் தெரிவுசெய்யப்பட்டார். 15 வயதுக்குட்பட்டோருக்கான  போட்டியில் யுனியன் அணி வெற்றிக்கிண்ணத்தை பெற  யாழ் இந்து அணி 2ம் இடத்தை பெற்றுக் கொண்டது. இதில் லக்சிகன் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவானார். 17 வயதிற்குட்பட்டோருக்கான  போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்க வெம்பிளி யுனைற்ரட் 2ம் இடத்தை தட்டிச் சென்றது. இதில் ஜென்வின் சிறந்து விளையாட்டு வீரராகவும் ரோஜன் சிறந்த பந்துக் காப்பாளராகவும் தெரிவுசெய்யப்படார்கள். தறிந்த போட்டியில் யுகெ அணி வெற்றிக்கிண்ணத்தை பெற கிங்ஸ்ரன் போய்ஸ் 2ம் இடத்தை தட்டிச் சென்றது. இதில் சரவணன் சிவானந்தன் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவானர்.

மேலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என எல்லோரும் உற்சாகமாக பங்கேற்றிருந்தனர். சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பழம் பெறுக்குதல், தேசிக்காய் ஓட்டம்,  முட்டி உடைத்தல், கயிறு இழுவை என பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

தாயகத்தின் நினைவுகளோடு உற்சாகமாக  இடம்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் வர்த்தகர்கள் மலிவுவிலை  பொருட்களையும், நல்வாய்ப்பு சீட்டுக்களையும்,  தமிழீழ அரசியற்துறை ஐக்கிய ராச்சியத்தின் தொண்டர்கள் தாயக நினைவுப்பொருட்களையும் விற்பனை செய்திருந்தனர்.சிற்றுண்டிச் சாலையில் அறுசுவை உணவுகள், தாயக பாராம்பரிய உணவுகள்   என மக்கள் மக்கள் இன்னும் தாயக உணர்வோடு இணைந்து சுவைத்தனர். ஐக்கியராச்சியம் தமிழீழ அரசியல் துறையின் விளையாட்டு ஆணையத்தினால் நடத்தப்பட்ட இந்த அடிக்கல் நாயர்கள் நினைவு பெவற்றிக்கிண்ண விளையாட்டு விழா நூற்றுக்கணக்கான தேசநேசத் தொண்டர்களின் ஆதரவில் சிறப்பாக்கப்பட்டிருந்தது

தேசம் நோக்கிய சேநப்பணியில் இளையர்களை ஒன்றுபடுத்தும் இந்த விளையாட்டுப் போட்டி மெய்வெளி தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையில் சிறப்பாக இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.