ஆயிரம் குள வேலைத்திட்டத்தின் கீழ் நயினாமடு குளத்தின் புனர்நிர்மான வேலைகள் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் நயினாமடு கிராம சேவகர் பிரிவில் நயினாமடு குளம் ஜனாதிபதியின் செயல்திட்டத்திற்கு அமைவாக ஆயிரம் குள வேலைத் திட்டத்தில் இக்குளம் தெரிந்து எடுக்கப்பட்டு அதன் புனர்நிர்மான வேலைகளை கௌரவ R.H உபாலி சமரசிங்க அவர்களினால் வைபவ ரீதியாக புனர்நிர்மான வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் போது இந்த பகுதியுள்ள விவசாயிகள் இரண்டு போக நெற்செய்கையினையும் அதிகளவு செய்யப்பண்ண முடியும். அந்த அடிப்படையில் இன்றைய தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் B.A சரத்சந்ரா அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் M.ஜெகதீஸ்வரன் , T. திலகநாதன் மேலதிக அரசாங்க அதிபர் கமநல உத்தியோகத்தர் பிரதேச சபை உறுப்பினர் M. அகிலன் ஆகியோரும் இந்த நிகழ்வுக்கு கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


