குஜராத் சுரங்கத்தில் கண்டுபிடித்தவை வாசுகிப் பாம்பின் உடல் எச்சங்கள்!
வரலாற்றுக்கு முந்திய புராணக் கதைகள் நிஜமாகும் தருணம்
படம் : குஜராத் பானந்த்ரோவில் உள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு தோற்றம்.
47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இப்போது இருப்பது போன்று காணப்படாத மத்திய ஈயோசீன் (Middle Eocene) காலப்பகுதியில் வாசுகிப் பாம்புகள் (Vasuki Indicus) இன்றைய ஆசிய, ஆபிரிக்கக் கண்ட நிலப்பரப்புகளில் வாழ்ந்துவந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிறுவுகின்றனர்.
“வாசுகி அதன் உடற்பருமனின் அடிப்படையில் மிக மெதுவாக நகரும். பதுங்கியிருந்து வேட்டையாடும் விலங்கு, அது அனகொண்டாக்கள் மற்றும் மலைப்பாம்புகள் போன்றே உடலால் சுற்றி இறுக்குவதன் மூலம் அதன் இரையை அடக்கும். உலகின் வெப்பம் இன்றைக்கு இருப்பதை விட மிக அதிகமாக இருந்த காலத்தில் கடற்கரைகளுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலங்களில் இந்த வகைப் பாம்புகள் வாழ்ந்தன”