சிங்கள சமூகத்தவருக்கு மணலாறில்  காணி களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


தமிழரின் இதயபூமி என்று வர்ணிக்கப்படும் மணலாறில் சிங்கள சமூகத்தவருக்கு வலி. வடக்கில் – ஒட்டகப்புலத்தில் வைத்து காணி களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சென்ற  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 இலட்சம் பேருக்கு காணி உரிமை வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின்கீழ் 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார். இவ்வாறு காணி உறுதி வழங்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களே என்று தெரியவருகிறது.

மணலாறு பிரதேசம் ஏற்கனவே வெலி ஓயா எனப் பெயர் மாற்றப்பட்டு 1980கள் முதல் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பகுதியாக மணலாறு உள்ளது. இந்த இரு மாகாணங்களின் நிலத்தொடர்பையும் துண்டிக்கும் விதமாக இந்தப் பகுதியை அநுராதபுரத்துடன் இணைத்து தனிமாவட்டமாக அறிவிக்கவும் முயற்சிகள் இடம்பெற்றன – இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மணலாறு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து காணிகளை வழங்கியமை பல தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.