ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.

ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தான் பார்க்கவில்லை எனவும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தெரிவித்ததால், அவர் மீதான வழக்கை ரத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல எனவும், மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது குற்றம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார். இந்த நிலையில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுன் இந்த கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறும் போது, ‘ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும்? இது கொடூரமாக கருத்து என குறிப்பிட்டுள்ளார். இதோடு, குழந்தைகள் அடங்கிய ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, எனக் கூறி ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை எதிர்த்த வழக்கில் பதிலளிக்கவும் தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.