இலங்கையில் GOAT ஷூட்டிங்-விரைவில் இலங்கை வருகிறார் விஜய்.

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர்களின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.
படத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக விரைவில் படக்குழு  இலங்கைக்கு விரைவில் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.