ராமேஸ்வரத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி.

ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்தப்பட்டவிருந்த பல இலட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராமேஸ்வரத்தையடுத்து மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. குறித்த பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர்.

இருப்பினும் கடத்தல் காரர்கள் நாட்டுப் படகில் சென்றுவிட்டதையடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடற்பரப்பிற்குள் உடனடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினர் குறித்த கடகினை கைப்பற்றினர். இதன்போது குறித்த படகில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றதோடு, 18 மூட்டைகளில் பல இலட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகளை காவல் படையினர் கைப்பற்றினர்.இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணகைளை முன்னெடுத்து வருகின்றனர்.