காசாவில் இருந்து பொதுமக்களை உடனே வெளியேறுமாறு எச்சரிக்கை-பெஞ்சமின் நேதன்யாகு.

காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் போரை தீவிரப்படுத்த உள்ளதால் காசாவில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதேபோல், ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிசும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்த உள்ளோம் என எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து, காசா பகுதியில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.